Header Ads

சிரியாவில் வான் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 21 பேர் சாவு

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், குறிப்பிட்ட நகரங்களில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டு கிளர்ச்சியாளர்கள் படையும், அரசுப்படையும் மோதி வருகின்றன.

மற்றொரு பக்கம் ஐ.எஸ். மற்றும் அல் நுஸ்ரா அமைப்புகளின் இருப்பிடங்களை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகளும் ரஷிய படையும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவில் பதுங்கி இருக்கும் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி படை வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஆனால் இதுபோன்ற வான்தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். சிரியாவின் வடமேற்கு மாகாணத்தில் அல் நுஸ்ரா அமைப்பின் பிடியில் உள்ள நகரில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கு உள்ள சந்தைப்பகுதியில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் சிறுவர்கள் 5 பேர் உள்பட அப்பாவி மக்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.