Header Ads

கேளிக்கை விடுதியில் 50 பேர் சுட்டுக் கொலை: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு பகிரங்க அறிவிப்பு..

கேளிக்கை விடுதியில் 50 பேர் சுட்டுக் கொலை: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு  பகிரங்க அறிவிப்பு..  காரணம் ஆணும் ஆணும் முத்தமிட்டால் ஒமருக்கு பிடிக்காதுஅமெரிக்க கேளிக்கை விடுதி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலை நடத்திய ஆப்கன் வம்சாவளி அமெரிக்கரான ஒமர் மடீன் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் என்று அந்த அமைப்பு தங்களது வானொலியில் அறிவித்துள்ளது. இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்லாண்டோ நகரில் தன் பாலின உறவாளர்களுக்காக பல்ஸ் நைட் கிளப்என்ற கேளிக்கை விடுதி செயல்படுகி றது. அங்கு நேற்று முன் தினம் அதிகாலை புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயமடைந்தனர். 100 பேரை தீவிரவாதி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றஸ்வாட் போலீஸார், தீவிரவாதியின் கவனத்தை திசை திருப்பி, அவனை சுட்டுக் கொன்றனர்.
911- ஐ அழைத்த தீவிரவாதி

எப்பிஐ போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நியூ யார்க்கில் ஆப்கானிஸ்தான் பெற் றோருக்கு பிறந்த ஒமர் மடீன் (29) தான் அந்த தீவிரவாதி என்பது தெரியவந்தது. இந்நிலையில் முதல் தாக்குதலை நடத்திய பின், கேளிக்கை விடுதி கழிவறைக்குள் இருந்தபடி அவசர போலீஸின் 911 எண்ணை தொடர்பு கொண்ட ஒமர் ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் விசுவாசி என தன்னை அறிமுகம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2013-ல் பாஸ் டனில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய சர்னேவ் சகோதரர்கள் குறித்தும் தனது முழு பெயரையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.

அதே நேரம் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுள் ளது. அந்த அமைப்பு அல்-பயான் என்ற வானொலி சேவையை நடத்தி வருகிறது. அதில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒமர் மடீன் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் என்று தெரிவித் துள்ளது. இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘தீவிரவாதம் மற்றும் வெறுப்புணர் வின் பெயரில் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலை. இவ்வழக்கை எப்பிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்என தெரிவித்துள்ளார்.

ஆர்லாண்டோ போலீஸ் உயர திகாரி ஜான் மினா கூறும்போது, ‘‘தீவிரவாதி ஒமர் திட்டமிட்டு, முழுமையாக தயாரான பின் இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்’’ என தெரிவித்துள்ளார்.

இருமுறை விசாரணை

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு களில் ஒமரிடம் எப்பிஐ அதிகாரி கள் இரு முறை விசாரணை நடத் தியுள்ளனர். அப்போது ஒமருக்கு எதிராக எந்தவொரு ஆதாரங்க ளும், வலுவான சந்தேகங்களும் எழாத காரணத்தினால், அவனை கண்காணிப்பதை எப்பிஐ அதிகா ரிகள் கைவிட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் 2007 முதல் உலகின் மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜி4எஸ்ஸில் ஒமர் பணியாற்றி வந்துள்ளான். இதனால் அவனது நன்னடத்தையில் வலுவான சந்தேகங்கள் எழவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தில் பணியாற்றியதன் மூலம் ஒமர் இரு வாரங்களுக்கு முன் சட்டரீதியான கைத் துப்பாக்கி மற்றும் நீண்ட குழல் துப்பாக்கி ஒன்றையும் வாங்கியுள்ளான்.

இதற்கிடையில் அமெரிக்காவின் இரட்டை வர்த்தக கோபுரம் தாக்குதலுக்கு பின் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுதான் என சில தீவிரவாத ஆய்வு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் இது போன்ற ஒரு தாக்குதல்களை நடத்த தீவி ரவாதிகள் சதித் திட்டம் தீட்டலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர்.

மனைவிக்கு அடி உதை

ஒமரின் முன்னாள் மனைவி யூஸுபி கூறும்போது, ‘‘2009-ல் இணையதளம் மூலம் ஒமருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரிரு வாரங்களில் திருணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். பின்னர் அந்த ஆண்டு மார்ச்சில் புளோரிடாவில் திருணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் சராசரி கணவராகத் தான் ஒமர் நடந்து கொண்டார். மத ரீதியான பற்றோ, வன்முறை எண்ணமோ அவரிடம் இல்லை. உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் மட்டுமே அதிக நேரம் செலுத்தினார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. வெளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் காரணமில்லாமல் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். எனது பெற்றோருக்கு இது தெரிய வந்ததும், அவரிடம் இருந்து 2011-ல் விவகாரத்து பெற்று கொடுத்தனர். ஒமரிடம் இருந்து பிரிந்ததே நல்லதாகிவிட்டது’’ என்றார்.

ஆணும் ஆணும் முத்தமிட்டால் ஒமருக்கு பிடிக்காது

மதத்துக்காக இந்த தாக்குதலை நடத்தவில்லை என ஒமரின் தந்தை மிர் சித்திக்கி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘சில மாதங்க ளுக்கு முன் தன் பாலினத்தை சேர்ந்த இரு ஆண்கள் ஒருவருக் கொருவர் முத்தமிட்டு கொண்ட நாள் முதலாகவே எனது மகன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தான். நடந்த சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எனது மகன் தீவிரவாதியாக மாறுவான் என நினைத்து கூட பார்க்கவில்லை. மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார். ஒமரின் தந்தை மிர் சித்திக்கிம் அமெரிக்காவில் டிவி நிகழ்ச்சி நடத்தி வந்தவர். பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான கருத்துகளை தெரிவித்து வந்தார். அவர் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.