Header Ads

செயற்கையாக ஒரு இதயம்! அதை வைத்து 555 நாட்கள் உயிர்வாழ்ந்த வாலிபர்!

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் லார்க்கின் என்ற வாலிபர் இதயம் இல்லாமல் செயற்கை இதயத்தோடு சுமார் 555 நாட்கள் உயிர் வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யமும் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர், ஸ்டான் லார்க்கின். தற்போது 25 வயது வாலிபராக இருக்கும் லார்க்கின் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் முன்னர் ஒருநாள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ’familial cardiomyopathy’ மற்றும் ‘ arrhythmogenic dysplasia’ எனப்படும் மரபுசார்ந்த நோயால் லார்க்கின் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்தனர்.

இந்த நோய் தாக்கத்தால் இதயத்தின் தசைகள் அளவுக்கதிமாக விரிவடைந்து நாளடைவில் ரத்த நாளங்கள் பலவீனமடைந்து, பின்னர், இதயம் முற்றிலுமாக செயலிழந்து மரணத்தை விளைவித்து விடும் என்பதை தெரிந்திருந்த டாக்டர்கள் லார்க்கினுக்கு மாற்று இதயம் பொருத்த முடிவெடுத்தனர்.

ஆனால், அமெரிக்காவில் மாற்று இதய தானம் பெற பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் கடந்து விட்டதால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல என்பதை அறிந்திருந்த டாக்டர்கள் அவருக்கு பொருத்தமான மாற்று இதயம் கிடைக்கும்வரை தற்காலிகமாக செயற்கை இதயத்தை அவருக்கு பொருத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதிக்கப்பட்ட இதயம் அகற்றப்பட்டது. ஒரு கட்டிங் மெஷின் அளவிலான செயற்கை இதயத்துடன்கூடிய கருவி ஆபரேஷன் மூலம் அவரது உடலில் பொருத்தப்பட்டது. விலா எலும்பின் அடிப்பகுதியில் துளையிட்டு, ஒரு குழாய் மூலமாக அவரது இதயம் இருந்த இணைக்கப்பட்டிருந்த கருவியின் செயல்பாடு ரத்த சுழற்சியை சீர்படுத்துவதுடன் இதயத்தின் அறைகளுக்கு ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயுவை தங்குதடையின்றி செலுத்தவும் துணையாக அமைந்தது.

மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்களின் அனுமதியுடன் அந்த செயற்கை இதயம் கொண்ட இயந்திரத்தை முதுகில் சுமந்தபடி வீட்டுக்கு சிஸ்சார்ஜ் ஆகிச்சென்ற லார்க்கின், வழக்கம்போல் தனது குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடியும், கார் ஓட்டியும் 555 நாட்கள்வரை தனது வாழ்க்கை பயணத்தை ஓட்டி வந்துள்ளார்.

தற்போது ஸ்டான் லார்க்கினுக்கு தேவையான மாற்று இதயம் கிடைத்ததையடுத்து, மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் நடந்த மாற்று அறுவை சிகிச்சையின்போது அந்த இதயம் லார்க்கினின் உடலில் பொருத்தப்பட்டது. தற்போது உடல்நலம் தேறிவரும் அவர் வெகுவிரைவில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அவரது தம்பிக்கும் இதே பிரச்னை ஏற்பட்டு, இவருக்கு முன்னதாகவே அவருக்கு மாற்று இதய பொருத்தப்பட்டது.

No comments:

Powered by Blogger.