Header Ads

கருணாவின் திருகோணமலை கிளப்: மது விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார் ...



இலங்கை அரசியல் களத்தில் அனாதையாகிவிட்டதாகவும், தற்போது காணமல் போய் , பவரை இழந்து நிற்பவர்கள் வரிசையில் கருணாவும் ஒரு ஆள். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர்(மகிந்த ஆட்சியில் இருந்தவேளை) திருகோணமலை மற்றும் கிழக்கில் சில மதுபாண சாலைகளை ஆரம்பித்து இருந்தார். இதில் ஒன்று திருகோணமலையில் உள்ளது. இதனை லண்டன் ஸ்டைல் பப் ஆக மாற்றி. பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளார்,

அங்கே பலர் சென்று தண்ணியடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இவ்வாறு இருக்க தமிழ் தேசியம் பேசும் பலர் , தற்போது இலங்கை சென்று வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் விடுமுறைக்கு இலங்கை சென்று அங்கே இளைப்பாறி , சனிக்கிழமை தண்ணியடித்தால். பின்னர் தான் தெரிந்ததாம் அது கருணா நடத்தும் பப் என்று. அட போயும் போயும் இங்கே தான் வந்தோமா என்று , மனதில் நினைத்துக் கொண்டு செல்லவேண்டிய சூழ் நிலை என்கிறார்கள்.

இதனூடாக கருணா பெரும் பணத்தை மாதம் தோறும் சம்பாதிப்பதாகவும், சில அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் கருணாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உறுதி மொழி வழங்கி வருகிறார்கள். இது இந்திய சினிமா பாணியில் மாதம் தோறும் கருணா கொண்டு சென்று செலுத்தும் மாமூல் என்கிறார்கள். மாமூல் செல்லவில்லை என்றாக் கருணா கைதாகலாம் என்ற பயமும் உண்டு. 
Powered by Blogger.