Header Ads

நூற்றுக்கணக்கான லண்டன் நபர்களை தாக்கிய ரஷ்ய குண்டர் படை- பிரான்சில் பெரும் சர்சை


ஐரோப்பிய உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள், பிரான்சின் மாசெல்லா பகுதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சற்று முன் நடைபெற்ற போட்டியில் ரஷ்ய அணி மற்றும் பிரித்தானிய அணிகள் விளையாடி 1க்கு 1 என்ற கோலில் சம நிலை வகிக்கிறது. ஆனால் மைதானத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை, ரஷ்ய குண்டர்கள் துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள். இதனால் அவர்கள் உயிரைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, ரஷ்ய குண்டர்களை கைதுசெய்வதற்கு பதிலாக பிரெஞ்சுப் பொலிசார் பல பிரித்தானிய உதைபந்தாட்ட ரசிகர்களை கைதுசெய்து உள்ளே அடைத்துள்ளார்கள்.

நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டு உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் மேலும் தெரிவிக்கின்றன. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்  உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது.










Powered by Blogger.