Header Ads

இவர்கள் வெள்ளி பார்க்கச் சென்ற வெங்காயங்கள் அல்ல: ஒரு பிளான் போட்டு தான்..


ஆஹா இங்கே ஏதோ பழைய ஓவியம் போல, மகிந்தரின் உருவப்படம் இருக்க. அதனை அப்படியே வியந்துபோய் சம்பந்தரும் மைத்திரியும் பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இந்த புகைப்படத்திற்கு பின்னால் ஒரு பழிவாங்கும் படலம் உள்ளது. அது என்னவேன்றால் மைத்திரியின் பிளான் தான்.

மகிந்த இலங்கை அதிபராக இருந்த காலத்தில், பாவித்த ஜனாதிபதி மாளிகை. பல ஜனாதிபதிகள் இந்த மாளிகையில் தங்கி இருக்கிறார்கள். ஆனால் மகிந்த தங்கியிருந்த வேளையில் தான் யானை தந்தம் கொண்ட அலங்கரிப்பு, பொன் நிற பெயின்ட், வெண்கலத்தால் பல சிலைகள் என்று அந்த மாளிகையை பல கோடி கொட்டி அழகு படுத்தினார். போதக்குறைக்கு சிவப்பு கம்பளம் , விலையுயர்ந்த மேலும் பல பொருட்களை அங்கே வைத்து அழகு பார்த்தார். ஆனால் அவர் திடீரென ஒரே இரவில் தோல்வியுற்று அதிகாலை மாளிகையை விட்டு வெளியேறும் நிலை தோன்றிவிட்டது. இதனால் அவர் எதனையும் எடுத்துச் செல்லவில்லை.

இன் நிலையில் தான் , மைத்திரி இந்த ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வைக்காக திறந்துவிடுகிறேன் என்று அறிவித்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான், அவரும் அவரது உற்ற நண்பரான சம்பந்தரும் சென்று மாளிகையை மக்களுக்காக திறந்துவிட்டார்கள். 3 நாட்களில் மட்டும் சுமார் 45,000 பேர் வந்து மாளிகையை பார்த்துச் சென்றுவிட்டார்கள். இவர்கள் அனைவரும் வியந்துபோன விடையம். மகிந்த இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தாரா என்பது தான். 3 நாட்களில் 45,000 மக்கள் மனதில் மகிந்தரைப் பற்றி ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியுமா ? அது நடக்குமா ?  இல்லை...

ஆனால் இந்த மாளிகையை மக்கள் பார்வைக்கு திறந்து விட்டு. மைத்திரி தான் நினைத்ததை சாதித்து விட்டார். தற்போது இதனைப் பார்க்கும் மக்கள் அனைவரும் மகிந்த ராஜபோக வாழ்க்கை வாந்துள்ளார். ஆனால் நாம் பட்டினியில் கிடந்துள்ளோம் என்று பேசுகிறார்கள். இவ்வாறு மிகவும் நரித்தனமாக காய்களை நகர்த்துகிறார் மைத்திரி. இவரோடு தான் நாம் சமாதானம் பேசவேண்டும் என்றும் , சில தமிழ் அரசியல்வாதிகள் சொல்லிவருகிறார்கள். அப்படி என்றால் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை... 

No comments:

Powered by Blogger.