Header Ads

மீண்டும் ஒரு தமிழ் மாணவியைக் காணவில்லை: என்ன நடந்தது என்று தெரியவில்லை என்கிறார்கள்



வவுனியா – ஒலுமடு வேலடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக மாணவியின் உறவினர்கள் நெடுங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.17 வயதுடைய சந்திரகுமார் கிருசாந்தினி என்ற மாணவி வவுனியாவிற்கு தையல் பயிற்சிக்;கான பொருட்கள் வாங்குவதற்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாணவி தொடர்பான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.