Header Ads

தான் வைத்த நெருப்பில் தானே எரிந்து நாச்தியான பெண்! இலங்கையில் நடந்த அகோரம்

வீட்டு கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த பெண் ஒருவர் அதே தீயினுள் கருகி உயிரிழந்துள்ளார் என வலிகாமம் வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வலிகாமம் வடக்கு மக்கள் தங்கிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமில் குப்பை கொழுத்திய பெண் ஒருவர் உடம்பில் தீ பற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த முகாமில் வசிந்து வரும் பிரபாகரன் அஸ்ரினா (23) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 5ம் திகதி குறித்த பெண் குப்பை கொழுத்திவிட்டு அருகில் இருந்த தண்ணீர் தாங்கியில் மண்ணெண்ணை போத்தலை வைத்துள்ளார்.
இந்நிலையில் மண்ணெண்ணை போத்தல் காற்றினால் குறித்த பெண்ணின் உடலில் விழுந்த நிலையில் உடலில் தீ பற்றிய நிலையில் வீட்டில் அணைப்பதற்கும் ஒருவரும் இல்லாத நிலையில் தீ முழுவதுமாக பரவிய நிலையில் அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ். போதான வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதன் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.