Header Ads

செத்தவீட்டை நடத்த காசு இல்லாமல் தவிக்கும் லண்டன் நபர்கள்- அதிர்ச்சி தகவல் வெளியானது

பிரிட்டனில் அதிகரித்துச் செல்லும் இறுதிக் கிரியை செலவில் இருந்து தப்புவதற்காக அந்நாட்டின் நிவ் மில்டன் எனுமிடத்தைச் சேர்ந்த  ஒரு நபர் மரணமடைந்த தனது தாயை அவரது தோட்டத்திலேயே புதைப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

ஜோன் ரைட் என்ற இந்த நபருடைய தாய் கடந்த வாரம் உயிரிழந்துவிட்டார்.இறுதிக் கிரியைகளை நடத்திக் கொடுக்கும் மலர்சாலை இயக்குனர்கள் இதற்கு 5200 பவுன் பணம் கேட்கிறார்களாம்.இவ்வாறு அதிக பணம் கேற்பதால் தனது சொந்தத் தோட்டத்துக்குள்ளேயே தனது தாயின் உடலைப் புதைப்பதற்கு அவர் முடிவு செய்துவிட்டார்.இப்போது அவர் குழியைத் தோண்டத் தொடங்கிவிட்டார்.அந்தக் காட்சியையே நீங்கள் இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.அத்தோடு உடலை அடக்கும் வரை பாதுகாத்து வைப்பதற்காக குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

ஆக,இறுதிக் கிரியை தொடர்பாக மலர்சாலை நிர்வாகம் செய்யும் அத்தனை வேலைகளையும் அவரே செய்து பணத்தை மீதப்படுத்த விரும்புகிறார்.மலர்சாலை நிர்வாகங்கள் தாங்க முடியாத அளவுக்குப் பணத்தைக் கறக்கின்றன என்று ஜோன் ரைட் குற்றஞ்சாட்டியுள்ளார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.