Header Ads

யாழ் மயிலிட்டி ஆயுதக்களஞ்சியம் வெடிக்கலாம் எனவும் அச்சம்- ஆனால் அகற்ற முடியாது என்கிறது சிங்களம்



கொஸ்கம ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளாகி அதனால் பொது மக்களுக்கு  கடும் சேதங்கள் ஏற்படுத்தியதால் வடக்கில் மயிலட்டியில்-தமிழ் மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அகற்றுமாறு இப்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இருந்தும்,படைத்தரப்பு அந்தக் கோரிக்கைகளை நிராகரித்தே வருகின்றது.

கொஸ்கம ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளாகி அது மக்களுக்கு பெரும் ஆபத்தை உண்டுபன்னியதால் வடக்கு மயிலட்டி  ஆயுதக் களஞ்சியசாலையை அகற்றுமாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ளார். ஆனால்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மயிலட்டி இரானுவ களஞ்சியசாலையை  எக்காரணங்கொண்டும் அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.