Header Ads

மோபைல் போனில் உள்ள டாச்லைட்டை பாவித்து திருடி- இறுதியில் சிக்கி சின்னாபின்னமான தருடன்



யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுளைய முற்பட்ட கள்வன், முதலில் வீட்டுக்கு உள்ளே என்ன பொருட்கள் இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டுள்ளான். இதனால் தனது மோபைல் போனில் உள்ள டோச் லைட்டை பாவித்து முதலில் ஜன்னல் வழியாக கையை விட்டு வீட்டில் உள்ள பொருட்களை நோட்டமிட்டுள்ளான். இங்கே தான் அவனுக்கு , கெட்டகாலம் ஆரம்பமாகியுள்ளது. அனைவரும் தூங்கியிருப்பார்கள் என்று தான் திருடன் நினைத்துள்ளான்.

ஆனால் அங்கே தூங்காமல் இருந்த ஆச்சி ஒருவர் வெளிச்சத்தை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் தடுமாறிப்போன திருடன் மோபைல் போனை உள்ளே விழுத்திவிட்டு தப்பியோடிவிட்டான். வீட்டுக்காரர் மோபைல் போனை எடுத்துச் சென்று ,பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில். அதனை வைத்து கள்வன் யார் என அறிந்த பொலிசார் இன்று கள்வனைக் கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.