Header Ads

அமெரிக்காவில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது


அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் பல்ஸ் என்ற பெயரில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இது ஒரினச்சேர்க்கையாளர்களுக்கு பிரத்யேகமான விடுதியாக செயல்பட்டு வந்தது. அங்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டி ருந்தன. அப்போது திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஒமர்மைதீன் என்பவன் அங்கு இருந்தவர்களை நோக்கி சர மாரியாக சுட்டான். எந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப் பாக்கியால் தொடர்ந்து சுட்டப்படி இருந்தான்.

இதனால் அங்கிருந்த மக்கள் அலறியபடி அங்கும், இங்கும் ஓடினார்கள். அவர்களை விரட்டி விரட்டி சுட்டான். இதுபற்றி அறிந் ததும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் அந்த மர்ம மனிதனை சுற்றி வளைத் தனர். அவன் போலீசாரை நோக்கி சுட்டான். இதனால் போலீசார் அவனை சுட்டு வீழ்த்தினார்கள். அந்த இடத் திலேயே அவன் உயிரிழந் தான்.
மர்ம மனிதன் சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம் அடைந்த னர். 

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு ஒரினசேர்க்கையாளர்கள்  பேரணியில் கலந்து கொளண்ண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த   வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.  அந்த வாலிபரிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  பேரணியில் தாக்குதல் நடத்தபோவதாக  அந்த நபர் தெரிவித்துள்ளதாக முன்னதாக வெளியான  கருத்துக்களை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகமூடிகள் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாண்டா மோனிக்கா கடற்கரை அருகில் கைது செய்யப்பட்ட அந்த நபர், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடியதாக உள்ளூர் வாசிகளால் அடையாளம் கட்டபட்டு உள்ளார். இந்நிகழ்வுக்கும் ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.