Header Ads

வாடா மச்சான் ஒருவரை போட்டு தள்ளனும்- போகலாமா ? மதுரை TO சென்னை கூலிப்படை: உண்மைச் சம்பவம்"டேய் மாப்ளே வாங்கடா, நம்ம மாமாவுக்கு குடைச்சல் தர்ற ஒருத்தனை இன்னைக்கு முடிக்க போறோம்" என்று வில்லாபுரம் பகுதி நண்பர்களை அட்டாக் பாண்டி விசுவாசி அழைத்ததும், என்ன ஏதுவென்று விசாரிக்காமல், யாரை முடிக்க போகிறோம் என்பதுகூட தெரியாமல், நண்பன்  கூப்பிட்டதும், கேஷுவலாக போய் முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள் அவர்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தபின்தான் அவர்களுக்கு தெரியவந்தது, தாங்கள் பொலி போட்டது, மதுரையின் மெகா பிரபலம் பொட்டு சுரேஷ் என்று. குமரி முதல் கும்மிடிப்பூண்டி, கோவை முதல் நாகை வரை தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொலை செய்வது, ஆள் கடத்துவது என்று, மார்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் போல மதுரையிலிருந்து கூலிப்படையினர் சென்று வருகிறார்கள். அடையாள அட்டை இல்லாதது மட்டுமே குறை. மதுரையில் அஸ்ரா கார்க் எஸ்.பி.யாகவும், போலீஸ் கமிஷனராக கண்ணப்பனும் இருக்கும்போது கூலிப்படையினரின் அட்டகாசம் அடங்கியிருந்தது. அவர்கள், கூலிப்படையினரை நிரந்தரமாக உள்ளேயே வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் மாறிச் சென்றபின், பழைய திருடி கதவைத்திறடி கதையாகிவிட்டது. மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கே கேள்விக்குறியாகி விட்டது.

கடந்த வருடங்களில் கூலிப்படையினரின் அட்டகாசத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தாலும், குண்டாஸில் போட்டாலும் சட்டத்தின் இண்டு இடுக்குகளை பயன்படுத்தி வெளியே வந்து மீண்டும் தொழிலில் (!) இறங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு சிறை பயமோ, தண்டனை பயமோ கொஞ்சமும் இருப்பதில்லை.  நீதிமன்றங்களில் வழக்கு நிற்காமல் சட்டத்தின்மூலம் தண்டிக்கமுடியாமல், பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும்   கூலிப்படையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட கேங்லீடர்களை குறி வைத்து காவல்துறையினர்  என்கவுண்டர் மூலம் 'போட்டு' விடுவதும் உண்டு. அல்லது போட்டி கூலிப்படைகள் தங்களுக்குள் மாற்றிமாற்றி போட்டுக்கொள்வதுண்டு. அப்படியிருந்தாலும் செத்துப்போகும்   கூலிப்படைத்தலைவனின் விழுதுகள் விருட்சமாக கிளம்பி விடுகின்றன வெகுவிரைவில். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாமல் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல கொலைகளில் கூலிப்படையினரின் கைவரிசை உள்ளதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். அதிலும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைசேர்ந்த கூலிப்படையினர்.

எதைப்பற்றியும் யோசிக்காமல், தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவனை காசுக்காக பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு பதற்றமின்றி செல்லும் இவர்கள் யார், இவர்களை உருவாக்குபவர்கள் யார், கொலை செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் இந்த கூலிப்படையினர் நிம்மதியாக வாழ்கிறார்களா? கொலை செய்வது அவர்களுக்கு பாவமாக தெரியவில்லையா? போன்றவைகளை விசாரித்தால், பணமும், சாதியும், அதற்கு பின்னால் உள்ள அரசியலும்தான் கூலிப்படையினரை உருவாக்கி வருகிறது  தெரிகிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.