Header Ads

150 அடி உயரத்தில் விழுந்த பெண்ணை கற்பழித்த "கைட்" ஆனால் 5 வருட சிறை



தாய்லாந்து சென்ற பிரிட்டன் பெண் அன்க்கே மலை ஏறும் போது, தனக்கு வழி காட்ட என ஒரு நபரை அழைத்துச் சென்றுள்ளார். அபாய் என்ற இன் நபர் குறித்த 23 வயதுப் பெண்ணுக்கு சூட்கேஸ் பேக் செய்ய உதவிசெய்து கொடுத்து. அந்த வனப் பகுதியை தான் சுற்றிக் காட்டுவதாகவும் கூறி யோக்கியமான நபர் போல நடித்துள்ளார். இன் நிலையில், இப் பெண் மலை ஏறும் போது தவறுதலான 150 அடி உயரத்தில் இருந்து சறுக்கி விழுந்துவிட்டார். காயங்களோடு உயிர் பிழைத்த அந்தப் பெண் நடக்க முடியாமல் அவதிப்பட்ட வேளை. கீழே இறங்கி வந்த இன் நபர் அப்பெண்ணை தொடர்ச்சியாக கற்பழித்துள்ளார்.  பின்னர் வேறு ஆட்கள் அத்திசையால் வந்தவேளை அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்.

அவரை காப்பாறிய வேற்று நாட்டு சுற்றுலாப் பயணிகள். அவரை வைத்தியசாலை கொண்டு சென்றார்கள். பின்னர் பொலிசாருக்கு நடந்த விடையத்தை பெண் கூற. அவர்கள் அன் நபரை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இருப்பினும் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையே கிடைத்துள்ளது. கற்பழித்த நபர் இரண்டரை வருடங்களில் வெளியே வந்துவிடுவார். தனது மகள் விழுந்து காயப்பட்டு இருந்த நிலையில் கூட. அவர் படும் துன்பங்களை கூட பாராமல் இந்தக் கயவன் கற்பழித்துள்ளான். ஆனால் நீதிபதியோ அவனுக்கு 5 வருட தண்டனை தான் கொடுத்துள்ளார் என்று அவரது தாயார் கூறி கவலை வெளியிட்டுள்ளார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.