Header Ads

கத்தியை போட்டு இருந்த சிம்பிளாக கேஸை முடிச்சு இருக்கலாம்- 2 மாணவர் கொலையில் பொலிஸ் சொன்ன தகவல்


யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை பொலிசார் சுட்டுக் கொன்ற விடையம் தொடர்பாக பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில். கைதான 5 பொலிசாரையும் அனுராதபுர சிறையில் அடைத்துள்ளது சிங்கள பொலிஸ். இது இவ்வாறு இருக்க அந்த 5 பேரையும் அனுராதபுரத்தில் இருந்து மிகவும் பாதுகாப்பாக இன்று யாழ் அழைத்து வந்துள்ளார்கள் பொலிசார். ஒருவரை மட்டுமே ஜீப்பால் இறக்கி, சுட்ட இடத்தை காட்டுமாறு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள சந்து ஒன்றில் நின்றே இந்தப் பொலிசார் சுட்டுள்ளார்கள். அந்த இடத்தில் சல்லடை போட்டு தேடியும் துப்பாக்கி ரவையின் கோதுகள் கிடைக்கவில்லை.

ஆனால் இன்றைய தினம் அருகில் உள்ள இடத்தில் தேடி 1 கோதை எடுத்துள்ளார்கள் பொலிசார். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் நிலையில். அங்கு நின்றிருந்த தனது நண்பர் ஒருவருக்கு ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் கத்தி ஒன்றை இங்கே போட்டிருந்தால் விடையத்தை சிம்பிளாக முடித்திருக்கலாம் என்பது தான். அதாவது இறந்த மாணவர்களுக்கு பக்கமாக ஒரு கத்தியை போட்டு விட்டு. பொலிசாரை கத்தியால் குத்த வந்தார்கள் என்றும். அவர்கள் தலைக் கவசம அணிந்து வந்த யாழ் "ஆவாக் குழு" என்று நினைத்தே நாம் சுட்டு விட்டோம் என்று சிம்பிளாக கேஸை முடித்து இருக்கலாம் என்று அந்த சிங்கள அதிகாரி சிங்களத்தில் கூறியுள்ளார்.

சிங்களம் எப்படி எல்லாம் நரித்தனத்தை காட்டுகிறது பாருங்கள். இறந்துபோன மாணவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று எந்த சிங்களவரும் நினைக்கவில்லை.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.