Header Ads

ஒவர் கொலைக்கும் யாழ் செல்வேன் - மைத்திரி லீலை



ஆ.. ஊ என்றால் ஹெலிகொப்டர் ஒன்றை பிடித்துக் கொண்டு, ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் பலாலி விமான நிலையம் சென்றுவிடுகிறார்கள் இலங்கை அரசியல்வாதிகள். இதில் அதிபர் மைத்திரியும் ஒன்றும் குறைந்தவர் அல்ல. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சமயம் யாழ் சென்ற மைத்திரி. அவரது அம்மாவை சந்தித்து ஒரு சீனை போட்டார்.  யாழில் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னரும் யாழ் சென்றார். தற்போது மாணவர்களை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இதற்காகவும் அவர் யாழ் செல்கிறாராம்.

அவர் இறந்துபோன மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார் என்றும். ஆதரவு கூறுவார் என்றும் இணையங்கள் செய்திகளை வெளியிடுகிறது. மைத்திரி யாழ் சென்றால் சென்ற உயிர் திரும்பி வந்துவிடுமா ? முதலில் குற்றம் செய்தவர்களை ஏன் அனுராதபுரம் கொண்டுசென்றீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. குறித்த 5 சிங்களப் பொலிசாருக்கும் உரிய தண்டனை விரைவில் வழங்கப்படுமா ? அதுவும் தெரியவில்லை. ஆனால் யாழ் சென்று பெற்றோரை சந்திக்க முனைவதும். தன்னை ஒரு நல்லவர் என்று படம் காட்டவுமே மைத்திரி முற்படுகிறார். இவை தமிழர்களுக்கு விடிவை தருமா ?

தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டவேண்டாம் , இனத்துவேசத்தை காட்டவேண்டாம் என்று கடுமையான உத்தரவை ஜனாதிபதியாகிய அடுத்த வாரமே மைத்திரி போட்டிருந்தால். இன்று இதுபோன்ற கொலைகள் இடம்பெற்றிருக்குமா ? மக்களே பதில் கூறவேண்டும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.