Header Ads

நாசா கண்டது என்ன ? புட்டினுக்கு ஒபாமா அழைத்தார்


நாசாவின் விண்வெளிக் கலம் ஒன்று, எமது பால்வெளி மண்டலத்தில் ஒரு பொருளைக் கண்டுபிடித்துள்ளது. குறித்த பொருளை நாசா விஞ்ஞானிகள் கடந்த 3 நாட்களாக மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருகிறார்கள். இது விண் கல் அல்ல. மிகவும் நேர்த்தியாக ராக்கெட் போல வடிவமைக்கப்பட்ட பொருள் ஆகும். அது நமது சூரிய கிரகத்தை நோக்கி நகர்ந்து வருவதும். இடை இடையே தனது பாதையை மாற்றி பயணிப்பதும் மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வேற்று கிரக வாசிகளின் விண் கலம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பை பார்த்தால், இது ஒரு தாக்குதல் விண்கலமாக இருக்கலாம் என்பதே ஓபாமாவின் கவலையாக உள்ளது என்கிறார்கள்.

குறித்த இடத்தில் இருந்து பூமியை அது வந்தடைய அடுத்த வரும் (2017) செப்டெம்பர் மாதம் பிடிக்கும் என்று கூட நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை கூட கணக்கில் எடுக்காமல் , ரஷ்ய அதிபர் புட்டினை நேரடியாக தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் ஓபாமா இது குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். உடனடியாக உலகை காக்கும் , சில ஏவுகணை திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும்.  பூமியை வேற்றுக்கிரக வாசிகள் தாக்கினால். எதிர் தாக்குதல் நடத்த , தயாரான நிலையில் ஒரு நிலையம் இருக்கவேண்டும் என்றும். அதற்கான் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் ஓபாமா கூறியுள்ளார்.

குறித்த மர்ம ஏவுகணை போன்ற இந்த உருவம் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பூமியை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது. அது சரியாக செப்டெம்பர் மாதம் 2017ம் ஆண்டு நமது சூரிய குடும்பத்தினுள் பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.