Header Ads

கெளரிக் காப்பு எடுக்க எனப் போய் காதலனோடு கம்பி நீட்டிய யாழ் பெண் - நடந்தது இது தான்... படியுங்கள்



யாழ் மருதனார் மடத்தை சேர்ந்த 19 வயதுப் பெண் ஒருவர், வேறு சமூகத்து பையனை காதலித்துள்ளார். இக் காதல் நிறைவேறாது என்றும் அவனை மறந்துவிடுமாறும் பெற்றோர் கூறி அவரை சிறுது காலம் வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள். சில வாரங்கள் கழித்து அவர் வெளியே சென்று வர அனுமதி கொடுத்த தாயார். அண்ணா அல்லது அப்பாவுடன் மட்டுமே வெளியே செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் அவர் எங்கே சென்றாலும் அண்ணா அல்லது அப்பா கூடவே செல்வது வழக்கமாம்.

இன் நிலையில் குறித்த பெண் தான் கெளரி விரதம் இருக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அம்மாவும் இது நல்ல விடையம். உன் மனது தூய்மையடையும் என்று கூறியுள்ளார். கெளரி காப்பு எடுக்க அவர் திருநெல்வேலியில் உள்ள கோவில் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும் அதனை கூட தாயார் சந்தேகக் கண்ணோடு தான் பார்த்துள்ளார். அப்பாவை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் அழைத்துச் சென்று கோவிலில் விட்டு , வெளியே காத்துக்கொண்டு இருந்துள்ளார். மகள் கெளரி காப்பை எடுத்துக்கொண்டு வருவாள் என்று.

ஆனால் கோவிலுக்கு உள்ளே ஏற்கனவே காதலன் காத்திருந்த விடையம் இவர்களுக்கு தெரியாது. காதலனோடு அப்பெண் பின் வாசல் வழியாக சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று, சில நேரம் கழித்தே தந்தை நிலமையை உணர்ந்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் கெளரி காப்பு எடுக்கப் போய் பெண் கம்பி நீட்டியது தான் மிச்சம்... 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.