Header Ads

பிரிட்டன் ஆமியை எப்படி எல்லாம் வெட்டுகிறார்கள் பாருங்கள்



ஈராக்கில் மொசூல் நகரை பிடிக்க நடக்கும் பெரும் யுத்தத்தில், பிரித்தானிய படைகளை பின்னுக்கு விட்டு தாம் முன்னேறிச் செல்கிறது அமெரிக்க படை.  இதனால் பெரும் குழப்ப நிலை உருவாகியுள்ளது. காரணம் என்னவென்றால் பல பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் இயக்கம் தற்போது ஈராக்கில் மொசூல் நகரை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இன் நிலையில் ஈராக்கிய படையக், அமெரிக்க துருப்புகள் மற்றும் பிரித்தானியாவின் அதிரடிப் படையினர் இணைந்து இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ஐ.எஸ் அமைப்பின் தலைவர்கள் பலர் மொசூல் நகரில் சிக்கியுள்ளார்கள்.

நாலா புறமும் சுற்றிவளைத்துள்ள படையினர் அவர்கள் தப்பிச் செல்லாதவாறு பெட்டி அடித்துவிட்டார்கள். இன் நிலையில் ஐ.எஸ் தலைவர்களை உயிரோடு பிடிக்க அமெரிக்க டெல்டா படை தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் பிரித்தானிய படைகளுக்கு அல்வா கொடுத்துவிட்டு. அவர்களை பிறிதொரு இடத்தில் சண்டை இடச் சொல்லி கூறிவிட்டு. ஐஎஸ் தலைவர்கள் உள்ள இடம் நோக்கி அமெரிக்க படைகள் நகர்ந்து வருகிறது. அதாவது மொசூல் நகரை பிடிக்க பிரித்தானியாவின் உதவி தேவை.

ஆனால் ஐ.எஸ் தலைவர்களை அழிக்க அல்லது உயிரோடு பிடித்துவிட்டோம் என்று உலகிற்கு காட்ட அமெரிக்க துறுப்புகள் முனைப்பு காட்டி வருகிறது என்பது தான் பிரித்தானியாவால் பொறுக்க முடியவில்லையாம். எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்றது மாதிரி, புகழை அமெரிக்கா தட்டிச் செல்லப் பார்கிறது என்றும். சில இடங்களில் தம்மை அனாதரவாக விட்டு விட்டு அவர்கள் மட்டும் முன்னேறிச் செல்வதாகவும் பிரித்தானிய படைகள் தெரிவித்துள்ளார்கள். இது இன்றைக்கு நேற்றா நடக்கிறது ? காலதி காலமாக இதனை தான் அவர்கள் செய்கிறார்கள் என்பது மட்டும் ஏன் இவர்களுக்கு புரியவே இல்லை ?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.