Header Ads

யாழில் இதிலும் மூக்கை நுளைக்கும் அமெரிக்கா- கொலை பற்றி விசாரணையாம்


யாழ்ப்பாணத்துக்குப் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் சிறிலங்கா பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானதை அடுத்து வடக்கில் குழப்பமான நிலை உருவானது. இது குறித்து அவர் மிக ஆர்வமாகக் கேட்டறிந்தார் என்று கூறப்படுகிறது. சிறிலங்கா பொலிஸாரினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்டு யாழ் மக்கள் ஏதாவது புரட்ச்சியில் ஈடுபடுவார்களா ? என்பது போன்ற தனது சந்தேகங்கள் பலதை அவர் கேட்டறிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்ததில் அமெரிக்க தூதுவரின் யாழ் விஜயம் முழுக்க முழுக்க , இந்த 2 மாணவர் கொலை தொடர்பானதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க எந்த விடையத்தில் தான் தனது மூக்கை நுளைக்காமல் இருந்துள்ளது. சொல்லப்போனால் இதற்கும் ஐ.நா சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருவேன் என்று உறுதி மொழி கொடுத்திருக்கும். இதனை நம்பி தமிழர்களும் காத்திருப்பார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.