Header Ads

கடும் சரிவில் ஹிலரி - பெரும் சதிகள் இடம்பெற்று தோல்வி அடையலாம்



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் டொனால் ரம்பை விட சுமார் 14 விகிதம் முன்னிலை வகித்து வந்த ஹிலரி கிளிங்ரன் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளார். ஹிலரி கிளிங்ரன் முன்னர் ராஜாங்கச் செயலாளராக இருந்தவேளை, அவது மின்னஞ்சல் பலதை திருடிய நபர் ஒருவர் அதனை வெளியிட்டு வருகிறார். இந்த மின்னஞ்சல்களில் எதுவும் பாரதூரமான விடையங்கள் இல்லை. இருப்பினும் இது எவ்வாறு அவருக்கு சென்றது ? செக்ஸை தொழிலாகக் கொண்டுள்ள அந்த கட்டழகான இளைஞரை ஹிலரி எதற்காக பயன்படுத்தினார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இது நாள் வரை மூடிக் கிடந்த இந்த விசாரணையை மீண்டும் திறக்க உள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எவ்.பி.ஐ நேற்று அறிவித்துள்ளது.

எவ்.பி.ஐ அமைப்பின் தலைவர் டொனால் ரம்பின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த விடையம். இன் நிலையில் அவர் சரியான தருணம் பார்த்து ஹிலரி கிளிங்ரனை அரசியல் ரீதியாக அடித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹிலரி மீது விசாரணை என்று அறிவித்த உடனே அவரது ஆதரவு பெரும் சரிவு கண்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் டெனால் ரம்பை விட ஹிலரி 1 % சதி விகிதமே முன் நிலை வகிக்கிறார். அமெரிக்காவில் இது போன்று அரசியல் விடையங்களில் , எப்.பி.ஐ தலையிடுவது இல்லை. ஆனால் இம் முறை நடக்கும் இந்தப் பிரச்சனை வரம்பு மீறிச் செல்வதாகவும். ஹிலரிக்கு எதிராக பெரும் சதிச் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பெரும் செல்வந்தராக இருப்பது டொனால் ரம் ஆகும். அமெரிக்க பணக்காரர்கள் வரிசையில் அவர் உள்ளார். அவர் தனது பணத்தை பெருமளவில் செலவு செய்து , ஹிலரிக்கு எதிராக பலரை திருப்பிவருவதாக கூறப்படுகிறது. வரலாற்றில் இதுபோல முன்னர் நடந்ததே இல்லை எனலாம். இதனால் அமெரிக்க தேர்தல் மேலும் சூடு பிடித்துள்ள நிலையில் , யார் வெல்வார்கள் என்பதனை எவராலும் கணிக்க முடியாமல் போயுள்ளது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அமெரிக்காவில் உள்ள ஒரு சில ஈழத் தமிழர்கள், முன்னர் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு என்று ஒன்றை திறந்து. ஒரு வீட்டில் இருந்து மின்னஞ்சல் மழையாய் பொழிவார்கள். அறிக்கை மழையால் அனைவரும் நனைந்திருந்தார்கள். அவர்கள் தற்போது ஹிலரிக்கான தமிழர் அமைப்பு என்று ஒன்றை ஆரம்பித்து ஹிலரியே வெல்வார் என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் இனி டரம்புக்கான தமிழர் அமைப்பு என்று தான் ஒரு அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் போல இருக்கே ? 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.