Header Ads

பிரின்ஸ் ஹரியின் ரகசிய காதலி இவர் தான் ஆடிப்போயுள்ளது அரச குடும்பம்



மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின், இரு புதல்வர்களில் மூத்தவர் வில்லியம். இளையவர் ஹரி. மகாராணியை தொடர்ந்து அடுத்த அரசராக வரும் வாய்ப்பு வில்லியத்திற்கே உள்ளது. அவரும் அதற்கு ஏற்றால் போல மிகவும் சாதுவாகவும், பெரும் அனுபவம் பெற்று திகழ்ந்து வருகிறார். ஆனால் இளையவர் ஹரி அப்படி அல்ல. அவர் மிகவும் ஜாலியானவர். பார்டி பாய் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஒரு நபர். எந்த ஏற்றத் தாழ்வும் இன்றி யாருடனும் சகஜமாகப் பழக கூடியவர். அதிலும் பெண்கள் விடையத்தில் இவர் பெரும் கில்லாடி. இவர் பெண்களை தேடிச் செல்லவேண்டிய தேவையே இல்லை. இவரை தேடி பல அழகான பெண்கள் தாமாகவே வருவது உண்டு.

தற்போது அவர் அமெரிக்காவில் உள்ள நடிகை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளரான "மெகான் மார்கல்" என்னும் பேரழகியோடு தொடர்பில் இருக்கிறார் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. மெகான் மார்கிள் மிகவும் அருமையான ஒரு பெண். பல அபலைப் பெண்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரு நடிகையும் ஆவார். அவரது செயல்பாடுகளில் மயங்கியே இளவரசர் ஹரி அவர் மீது மோகம் கொண்டார் என்று அரச குடும்ப வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தனியாகச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

இதுவரை காலமும் இவர்கள் தொலைபேசியூடாக மிகவும் ரகசியமாகப் பேசிவந்துள்ளதாகவும். இது பிரித்தானிய அரச குடும்பத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பெண்ணையாவது இளவரசர் ஹரி திருமணம் முடிப்பாரா என்று மக்கள் ஏங்குகிறார்கள். ஏன் எனில் அவருக்கு வாலிப வயது கடந்துகொண்டே செல்கிறது. மேலும் பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் மிகவும் பாரிய அளவில் சிறப்பாக நடைபெறும். அரிதாக நடக்கும் இதுபோன்ற வைபங்களை காண அன் நாட்டு மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் ஆசைப்படுவது வழக்கம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.