Header Ads

பிரபாகரன் படை யாழில் துண்டுப் பிரசுரம் -பொலிசார் பெரும் குழப்பம்



யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் நேற்று(30) துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன்,  யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ”ஆவா கெங்ஸ்டர்” என்று அழைக்கப்படும் வாள் வெட்டுக் கும்பல் உட்பட யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அனைவரினதும் கவனம் திரும்பியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த துண்டுபிபிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தது போல், வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், பாவணை மற்றும் சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் தமது கரிசணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.