Header Ads

யாழ் மல்லாகத்தில் வெடித்த குழு மோதல் அடித்து நொருக்கப்பட்ட கார்


மல்லாகம் - அளவெட்டி வீதியில் உள்ள நரிஜிட்டான் முகரி என்னும் இடத்தில் தீபாவளி தினமான நேற்று 29.10.2016 இரு குழுக்களுக்கிடையில் பெரும் மோதல் ஒன்று  மாலை 4 மணியளவில் வெடித்துள்ளது. மல்லாகம் நீதிமன்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் குறித்த களேபரம் நேர்ந்துள்ளது.

சுன்னாகம் பகுதியில் இருந்து 2 ஆட்டோக்களில் பொல்லுகள், கத்திகளுடன் சென்ற குழுவினருக்கும் நரிஜிட்டான் முகரியில் உள்ள குழுவினருக்கும் இடையிலேயே குறித்த மோதல் ஆரம்பமாகியுள்ளது.  சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த சண்டையை 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ நின்று வேடிக்கை பார்த்துள்ளார்.  களேபரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப் பட்டுள்ளது. இருவரின் தலைகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் காயமடைந்ததாகவும், அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சண்டையின் முடிவில் வந்த 30 க்கும் மேற்பட்ட  தெல்லிப்பளைப் பொலிஸார் ஒரு ஆட்டோவையும், மோதலில் ஈடுபட்ட சிலரையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை சண்டை நடைபெற்ற வேளை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது ஸ்மாட் போனில் நடந்த சண்டையை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். பொலிசார் அவ்விடத்தை நோக்கி வருவதை அவதானித்த ஒரு குழு அங்கிருந்து ஓட அரம்பித்தவேளை. இன் நபரின் ஸ்மாட் போனையும் பறித்துக்கொண்டு தான் ஓடி மறைந்துள்ளார்கள் என்றால் பாருங்களேன்...

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.