Header Ads

முடிந்தால் பண்ணி பாருங்கள் அடம் பிடித்த பிள்ளையான்



கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வுக்கு வருகை தந்திருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான (பிள்ளையான்), மாகாண சபை அமர்வு முடிந்த பின்னர், தான் வெளியில் வரும்வரை தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறி, மாகாண சபைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். மாகாண சபைக்குள் பொலிசார் செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனைப் பாவித்து முடிந்தால் பண்ணிப் பாருங்கள் என்று கூறி பிள்ளையான் அங்கேயே உட்கார்ந்துவிட்டார். திடீரென இப்படி ஒரு கெத் இவருக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை.

வெளியே நின்ற பொலிசார் அல்லோல கல்லோலப்பட்டு ஓடி அலைந்தார்கள். வியாழக்கிழமை (27) பிற்பகல் 3.15 மணியளவில் சபை அமர்வு முடிவடைந்த நிலையில், பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்த அவர், அங்கேயே இருந்துவிட்டார். பின்னர் சாவகாசமாகவே எழுந்து சென்று பொலிசாரிடம் , இப்ப ஓகே போகலாம் என்று சினிமா பாணியில் கூறியுள்ளார். இதேவேளை இவரை பரோலில் கொண்டு வந்த பொலிசாருக்கு மூச்சு வாங்கிவிட்டது. எங்கே பெரிய பிரச்சனையாக இது மாறிவிடுமோ என்று ஏங்கியுள்ளார்கள் அவர்கள்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.