Header Ads

சாவகச்சேரியில் விதுசா என்னும் 18 வயது மாணவி தூக்கில்- என்ன நடந்தது ?



சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் 18 வயதான சிவானந்தம் விதுசா எனும் யுவதி துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இவரது சடலத்தை மீட்ட சாவகச்சேரிப் பொலிசார் சடலத்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை (31) இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

பெற்றோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் , அவர்கள் விதுசாவை கண்டிக்கவில்லை என்றும். பரீட்ச்சை போன்ற எதிலும் அவர் சித்திபெறவில்லை என்ற கவலை அவருக்கு இல்லை என்றும் தெரிகிறது. காதலா இல்லை எவராவது இவரை மிரட்டினார்களா என்று தெரியவில்லை. மேலதிக தகவல் இது தொடர்பாக அதிர்வில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.