Header Ads

திருமணமான 3 மாதம்தான் இந்தப்பெண்ணின் சடலம் மட்டும்தான் கிடந்தது நடந்தது கொலையா தற்கொலையா நடந்தது என்ன

திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என அவரது கணவர் மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி பெண் சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். 

இவருடைய மகன் மணிகண்டன்(வயது 32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 2 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கஸ்தூரியின் கணவர் மற்றும் அவருடைய பெற்றோர், கஸ்தூரியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். தூக்குப்போட்டு தற்கொலை இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கஸ்தூரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தூக்கில் தொங்கிய கஸ்தூரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர்–மாமனாரிடம் விசாரணை மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா?

 என கஸ்தூரியின் கணவர் மணிகண்டன் மற்றும் மாமனார் சேகர் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கஸ்தூரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.