Header Ads

லண்டன் நகரமே அதிர்கிறது ... மாவீரர் நாள் நகரமே உருவாக்கப்பட்டு வருகிறது இரவு பகலாக வேலை நடைபெறுகிறது



லண்டன் ஸ்ரட்-பேட் நகரில் (எக்ஸ் எல் மண்டபத்திற்கு அருகாமையில்) உள்ள பெரிய இடம் ஒன்றில், கூடாரங்கள் போடப்பட்டு. அங்கே இரவு பகலாக மாவீரர் நிகழ்வு இடம் அமைக்கப்பட்டு வருகிறது. தூபிகள் , மாவீரர்களை நினைவு படுத்தும் சிலைகள், தூபிகள் மற்றும் வளைவுகள் என்று பிரம்மாண்டமான வேலைகள் ஒலிம்பிக் பார்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் ஆரம்பித்த வேலைகள் 5 நாட்கள் தொடரும் என்று அதிர்வு இணையம் அறிகிறது. மாவீரர் தினமான 27ம் திகதி காலை 10.00 மணிக்கு , இவ்விடம் ஒரு தமிழ் ஈழம் போல காட்சியளிக்கும்.

அருகே உள்ள உயரமான கோபுரத்தில் இன்றில் இருந்தே மிடுக்குடன் தமிழீழ தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி , பகைவனிடம் போய் சொல்லுங்கள் இது தான் முதல் அடி என்ற பாட்டிற்கு அமைய, தற்போது லண்டனில் உள்ள தமிழர் கோட்டையில் புலிகள் கொடி... பார்க்கவே மிகவும் பெருமிதமாக உள்ளது. நாம் தமிழனடா எங்களை எவனும் தட்டிக்கேட்க்க முயாதடா , தன் மானம் எங்களுக்கு உண்டடா என்று அறைகூவல் விடுக்கிறது இக் கொடி... வாருங்கள் மக்களே வாருங்கள், மறைந்தாலும் எம் மண்ணுக்காய் போராடி , இளமைக்கால நினைவுகளை துறந்து மண்ணில் வித்தான மாவீரர்கள் பூஜிப்போம்...

அவர்கள் நெஞ்சில் சுமந்த கனவை நாம் நனவாக்குவோம் என ஒன்று கூடி சம்பதம் எடுப்போம்.  சில ஊடகங்கள் இரண்டு இடத்தில் மாவீரர் தினம் நடப்பதாக கூறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் வீட்டிலேயே நாம் விளக்கை கொழுத்துவோம் என்று சிங்களம் தூண்டி விட்ட வசனங்களை சிலர் வந்து பேசி, மக்களை மாவீரர் தினங்களுக்கு போகவிடாமல் செய்கிறார்கள். நாம் ஒன்றை கேட்க்க விரும்புகிறோம்... வீட்டில் பூஜை அறை இருகிறது என்பதற்காக யாராவது கோவில் செல்லாமல் இருப்பார்களா ? ஏன் ஊடகங்களே மக்களை திசை திருப்பி எமது பலத்தை குறைக்க நீங்களே துணை போகிறீர்கள் ? கூடுவோம் லண்டனில் , 

தமிழரின் தாகம் ... தமிழீழத் தாயகம்


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.