Header Ads

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை போட்டு தள்ளிய படைகள் நடப்பது என்ன



ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலில் நிலைகொண்டுள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் படைநடவடிக்கைகள் மூலம் ஒரே நாளில் சுமார் 126 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமை தீவிரவாத எதிர்ப்பு படைகள் மேற்கொண்ட தாக்குதலில் மோசூலின் கிழக்குப்பதியில் இருந்த 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அப்படைகளின் தளபதி அப்துல் வஹாப் அல் – சய்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மோசூலின் தெற்கு பகுதியில் ஈராக் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 54 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலின் மூலமாக தீவிரவாதிகள் பயன்படுத்திவந்த பல நூற்றுககணக்கான வாகனங்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அதே தினத்தில் காலை ஈராக்கின் இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகள், மோசூலின் மேற்கு பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் மூலமாக 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி தொடக்கம் ஈராக்கின் முக்கிய நகரமான மோசூலில் அரச படை மற்றும் அதனுடன் இணைந்த தீவிரவாத எதிர்ப்புப் படைகள் மற்றும் குர்திஸ் போராளிகள் குழு என்பன இணைந்து பாரிய எதிர்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

நான்கு திசைகளில் இருந்தும் தரை மற்றும் வான் மார்க்கங்களில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களின் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நெருக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டு முடிவடைவதற்குள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல் – அபாடி தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.