Header Ads

அவுஸ்திரேலியா வைத்துள்ள பெரும் ஆப்பு இனி அங்கே இல்லிகலாக செல்ல முடியாது




அவுஸ்திரேலியாவுக்குள் படகு மூலமாக வருவதற்கு முயல்கின்ற எவரும், ஆயுட்காலத்துக்கும் அவுஸ்திரேலிய விசா கிடைக்காமல் செய்வதற்கான புதிய சட்டமூலமொன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இது நிறைவேற்றப்படுமாயின், படகு மூலமாக வர முயன்ற எவருக்கும், சுற்றுலா, வணிக விசாக்கள் உட்பட எந்த விசாக்களும் வழங்கப்படாது.

இந்தச் சட்டமூலம், நாடாளுமன்றம் அடுத்ததாகக் கூடும் போது, சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மல்கொம் டேர்ண்புல், படகு மூலமாக வருவோர், அவுஸ்திரேலியாவுக்குள் வர முடியாது என்ற தெளிவான செய்தியைச் சொல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த மோதல், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மக்களுக்கும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்களைக் கடத்துவோருக்கும் இடையிலானது. இந்த ஆபத்தின் தாக்கத்தை, குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்களைக் கடத்தும் இவர்கள், மிகவும் மோசமான குற்றவாளிகள். அவர்களிடம், பல மில்லியன் டொலர்கள் பெறுமதியிலான வணிகம் காணப்படுகிறது" என்று, பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், குழந்தைகளுக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படும். அத்தோடு, குடிவரவு அமைச்சர் விரும்பினால், வேறு யாரையும் அனுமதிப்பதற்கு முடிவு செய்யலாம். தற்போதுள்ள நிலைமையின்படி, படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர முயலும் ஒருவர், அவுஸ்திரேலியாவுக்குள் குடியமர்த்தப்பட மாட்டார். மாறாக, அவரது நாட்டுக்கே திரும்பிச் செல்லவோ, மூன்றாம் நாடொன்றுக்குச் செல்லவோ, மனுஸ் அல்லது நவ்ரு தீவுகளில் குடியமரோ வாய்ப்பு வழங்கப்படும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.