Header Ads

இலங்கையில் தமிழர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது ? கிடு நடுங்கும் சிங்களம் கருணா சொல்ல உள்ள ராஜதந்திரம் என்ன ?



இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறு இந்த துணிவு வந்தது ? 2009ம் ஆண்டோடு அடங்கியிருந்த தமிழ் இனம் தற்போது மாவீரர்களை பகிரங்கமாக வணங்கி , மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்து அங்கே ஒளி ஏற்றியுள்ளார்கள். இவ்வாறு சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களில் தற்போது சிங்கள ராணுவம் தனது முகாம்களை அங்கே நிறுவியுள்ள நிலையில்.

மக்கள் அங்கே கூட சென்று புலிகளை நினைவு கூர்ந்துள்ளமை, ராணுவத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ தேசிய நிறமான மஞ்சல் சிகப்பு நிறத்திலான கொடிகளை முல்லைத்தீவு கடல்கரையில் ஏற்றிய சிலர், கடல் புலிகளுக்கும் வணக்கம் செலுத்தியுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாது பொலிசாரும் ராணுவத்தினரும் ஸ்தம்பித்துப்போய் உள்ளார்கள். முன்னர் ஒரு சில இடங்களில் மாவீரர் தின நிகழ்வு ரகசியமாக நடப்பதால், அங்கே சென்று அதனை குழப்பி வந்தது சிங்களம்.

ஆனால் இம் முறை வட கிழக்கில் பரவலாக எல்லா இடங்களிலும் மாவீரர் நினைவு தினம் நடத்தப்பட்டதால் எங்கே சென்று எதனைச் செய்வது ? என்ற பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தொடக்கம் வடக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருமே இம் முறை மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளார்கள். சம்பந்தன், சுமந்திரன் மற்றும் ஐயா விக்கினேஸ்வரன் போன்றவர்களை மட்டும் தான் காண முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள் வடக்கு மக்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.