Header Ads

வித்தை காட்டி பணத்தை சேர்த்து தான் செல்ல வேண்டும் என்று பிரான்ஸை சேர்ந்த சுற்றுலா பயணி ..!



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் தெருக்களில் வித்தை காட்டி பணம் சேர்த்து வருகின்றனர்.

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இதனை தொடர்ந்து தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்து கிடக்கின்றனர். மோடியின் இந்த திடீர் அறிவிப்பு வெளிநாட்டினரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசித்த பெற்ற கோவிலான பிரம்மா கோவிலை பார்ப்பதற்காக வந்த ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸிலிருந்து வந்த வெளிநாட்டினர் 12 பேர் இரண்டு  குழுக்களாக பிரிந்து வித்தை காட்டி பணம் சேர்த்து வருகின்றனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த 8ஆம் தேதியன்று பிரான்ஸிலிருந்து ராஜஸ்தான் வந்ததாகவும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் ஏ.டி.எம் இயந்திரங்களில்  இருந்து தங்களது பணத்தை எடுக்க முடியாததால் வேறு வழியின்றி வித்தை காட்டி அதன் மூலம் வரும் பணத்தை சேர்த்து தான் டெல்லி செல்ல வேண்டும் என்று பிரான்ஸை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.