Header Ads

பிரபாகரனுடன் சண்டை போட்டு வென்ற காட்சிகள் பாட புத்தங்களில்



போர் வரலாற்றைக் கூறும் நூல்கள் பாடசாலைப் பாடப்புத்தகத்தில் இடம்பெறவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக சொல்லப் போனால், தான் பிரபாகரனோடு போரிட்டு வென்ற புகைப்படங்கள் உட்பட அனைத்தும் மாணவர்கள் பாடப் புத்தகத்தில் இடம்பெறவேண்டும் என்று மகிந்த விரும்புகிறார். சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெரி டி சில்வாவால் எழுதி வெளியிடப்பட்ட ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேமேற்கண்டவாறு மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜெனரல் ஜெரி டி சில்வாவினால் எழுதப்பட்ட ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ மற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ போன்ற போர்வரலாறு தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்கள், பாடசாலைப் பாடத்திட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.  போர் வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்ற தருணத்தில், ஒரு காலத்தில் போரின் போது சிறிலங்கா படையினர் பட்ட துன்பங்கள், துயரங்கள், பாதிப்புகள் மற்றும் அவர்களின் பொறுப்புணர்வு என்பனவற்றை நினைவுபடுத்தும் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் ஈடுபடவுள்ளனர்.

அவர்கள் எமது படைவீரர்களை போர்க்குற்றவாளிகளாக அடையாளப்படுத்த முனைகின்றனர். அனைத்துலக நீதிபதிகளை விசாரணையில் ஈடுபடுத்தி எமது படையினரை இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டிக்க முயற்சிக்கின்றனர். புலிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. போரில் இறந்த படையினரின் மனைவிமாருக்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.