Header Ads

சுவிசில் கணவனை தீர்த்துக் கட்ட கள்ளகாதலனை அனுப்பிய மனைவி சிக்கியது எப்படி




சுவிட்சர்லாந்து நாட்டில் கணவனை தீர்த்துக்கட்ட கள்ளக்காதனை அனுப்பிய மனைவிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.
சூரிச்சில் உள்ள Illnau என்ற பகுதியில் 37 வயதான நபர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.ஆனால், கணவனுக்கு தெரியாமல் மனைவி ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரின் காதலுக்கு கணவன் இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியுள்ளார்.இதனை செயல்படுத்த தனது காதலனின் உதவியை நாடியுள்ளார். திட்டம் வகுக்கப்பட்டு முகமூடி அணிந்த இருவர் கணவனை கொல்ல அனுப்பட்டனர்.2013ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி கணவர் அதிகாலை நேரத்தில் தனது நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார்.
 
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் அவரை சரமாரியாக இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளானர். இருவரில் ஒருவன் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.எனினும், உயிர் ஊசலாடிய நிலையில் வீட்டிற்கு போராடி வந்த அவர் மருத்துவமனையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். நபரிடம் கொள்ளையிடவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், சம்பவம் நடந்தபோது அவரிடம் இருந்த எந்த பொருட்களையும் அவர்கள் கொள்ளையடிக்கவில்லை .எனவே, பொலிசாருக்கு சந்தேகம் அதிகரிக்க விசாரணையை தீவிரப்படுத்தியபோது தாக்குதலுக்கு உள்ளான நபரின் மனைவி மற்றும் அவரது காதலன் ஆகிய இருவர் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் வெளியானபோது, கொலை திட்டம் தீட்டிய மனைவிக்கு 16 ஆண்டுகளும் இதற்கு உதவியாக இருந்த கள்ளக்காதலனுக்கு 13 ஆண்டுகளும் சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.