Header Ads

சர்ச்சைக்குரிய பிரபல பிரித்தானிய புகைப்படக் கலைஞர் டேவிட் ஹாமில்டன் தற்கொலை?


சர்ச்சைக்குரிய பிரபல பிரித்தானிய புகைப்படக் கலைஞரும் இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் பாரிஸ் நகரில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் இறந்த நிலையில் விடுதி ஒன்றில் இருந்து உடலை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாமில்டன், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரசுரிப்பதால் பிரபலமடைந்தவர். சமீபத்தில் முன்னாள் சிறுமி மொடல் ஒருவர் குறித்த புகைப்படக் கலைஞர் ஹாமில்டன் தம்மை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம்ச்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

   
சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் அடங்கிய ஹாமில்டனின் சிறப்பு தொகுப்புகள் வெளியான சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் விற்பனையாவதுண்டு.மட்டுமின்றி இவரது படைப்புகள் அனைத்தும் கலை தொடர்பானது அல்ல எனவும் அவை அப்பட்டமான ஆபாசங்களின் தொகுப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்ததுண்டு.பிரான்சின் வானொலி தொகுப்பாளர் ஒருவர் தனது 13 வயதில் ஹாமில்டனால் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையானதாக வெளிப்படித்தியிருந்தார்

.மற்றொரு வானொலி தொகுப்பாளரும் தொலைக்காட்சி பிரபலவுமான Flavie Flament தமது சுயசரிதை புதினத்தில் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவரால் தாம் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இந்த தகவலை அடுத்து 3 பெண்கள் குறித்த அடையாளங்களுடன் 42 வயதாகும் தொகுப்பாளர் Flament என்பவரை தொடர்பு கொண்டதன் பின்னர், வெளிப்படையாகவே ஊடகங்கலுக்கு ஹாமில்டன் குறித்து குற்றச்சாட்டினை முன்வைத்தார்.Flament தமது மொடலாக இருந்ததை ஒப்புக்கொண்ட ஹாமில்டன், பலாத்கார குற்றச்சாட்டை மறுத்தார்.

83 வயதாகும் ஹாமில்டன் பாரிசில் இருக்கும் தமது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், இல்லை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று கூற்ப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.