Header Ads

கிறிஸ்துமஸ் தினம் வருவதையொட்டி லண்டன் மக்களுக்கு எச்சரிக்கை..!




கிறிஸ்துமஸ் தினம் வருவதையொட்டி சமூகவலைத்தளங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பர பொருட்களை நம்பி பொதுமக்கள் யாரும் தங்கள் பணங்களை உடனடியாக அளித்திட வேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பொருட்களை வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் லண்டன் பொலிசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்பு நாளாகவும் மற்றும் ஆரம்பநாட்களாகவும் Black Friday (வெள்ளிக் கிழமை) இருந்து வருகிறது.

   
அதாவது அன்றைய தினத்தில் சமூகவலைத்தளங்களில் மக்களை கவருவதற்காக விதவிதமான பொருட்களை விளம்பர நிறுவனங்கள் குறைந்த விலையில் விளம்பரப்படுத்தி வரும். இதையும் நம்பி மக்கள் அனைவரும் பொருட்களை வாங்குகின்றனர். இந்த Black Friday தினத்தை தான் கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது சமூகவலைத்தளங்களில் நகைகள், கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மிகக் குறைந்த விலையில் கிடைப்பது போலவும், அதற்கு இனையாக பரிசுப் பொருட்களை தருவது போன்று போலி விளம்பரங்கள் தாயார் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அவர்கள் குறிப்பாக பிரித்தானிய மக்களை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையும் நம்பி பொதுமக்கள் தங்களுடைய credit card மற்றும் net banking சீக்ரேட் கோடுகளை அதில் போட வேண்டாம் என்றும் அதையும் மீறி நீங்கள் தங்களுடைய சீக்ரேட் கோடுகளை போட்டால் அவர்கள் தெரிந்து கொண்டு உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பணங்களையும் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

இது குறிப்பாக தற்போது உள்ள இளைஞரகளுக்கு என கூறியுள்ளனர். அவர்கள் தான் சமூகவலைத்தளங்களை நம்பி அதிக அளவில் பொருட்கள் வாங்குவதாக கூறியுள்ளனர்.மேலும் கடந்த ஆண்டு மட்டும் கிறிஸ்துமஸ் தின பொருட்களை வாங்கும் போது பரிசுப்பொருட்கள் தருவதாக நம்பி £10 மில்லியன் பவுண்ட் வரை பொதுமக்கள் இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அதனால் பொருட்களை வாங்கும் போது பரிசு பொருட்களை யாரும் நம்பி வாங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.