Header Ads

அடக்க முடியாத சர்வாதிகாரியாக விஷால் உருவெடுப்பார்..அடக்க முடிவு எடுக்கும் நடிகர்கள்




ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடைசியில் மனிதனைக் கடிச்ச கதை தான் விஷால் விஷயத்தில் என்கிறார்கள் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். பழைய சரத் அணியிடம் எளிமையாக அணுக முடியும்.. ஆனால் விஷால்   கம்பெனியை சந்திப்பதோ அணுகுவதோ இயலாத காரியம்..! அது மட்டும் அல்ல..நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கு போதே, தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தலைவர் ஆக வேண்டும் என்கிற  வெறி பிடித்து அலைகிறார்.

தாணுவை  கிண்டல் செய்தார்..பஜ்ஜி வடை சாப்பிடும் பஞ்சாயத்து கோஷ்டி என்றார். மேலும் மேலும் தயாரிப்பாளர்களை வம்புக்கு இழுக்கிறார். மொத்தமாக திரைப் படம் சார்ந்த அனைத்து சங்கதிற்கும் தான் ஒருவரே அதிபதியாக இருக்க வேண்டும் என்பது தான் அவரின் நோக்கம்..

பாரம்பரியமுள்ள ராதாரவி, மற்றும் சுத்த தமிழரான சரத்துக்கோ துளி கூட மரியாதை கொடுப்பதோ இல்லை. எல்லாமே தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்..! பூனைக்கு யாரவது மணி கட்டவேண்டும் இல்லையென்றால் யார் நினைத்தாலும் அடக்க முடியாத சர்வாதிகாரியாக  விஷால் உருவெடுப்பார் என்கிறார்கள்..கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது…!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.