Header Ads

கருணாஸ் வெற்றி பெறவே கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த நடிகர் பார்த்த வேலை



கருணாஸ் எப்படி எம்.எல்.ஏ ஆனார் என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிர். அனால், கருணாஸின் பழைய நண்பர்கள் அதனை பேருக்கும் இப்போ கருணாஸை பிடிப்பதில்லை. குறிப்பா…நகமும் சதையுமா கருணாஸ் வலம் வந்த அந்த நடிகர் நண்பர்…என்கிறது கோலிவுட்.

கருணாஸ் இப்போது எம்.எல்.ஏ வாக இருப்பதற்கு காரணமே அவர் தான் என்று கதை உலா வரும் நேரத்தில்…உண்மை வேறாம். வேறு ஒரு சோர்ஸ் மூலமாக எம்.எல்.ஏ சீட் வாங்கியுள்ளார் கருணாஸ். அவர் வெற்றி பெறவே கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த நடிகர் பார்த்த வேலை பயங்கரமாம்.

சீட் கிடைத்ததும், 1 கோடிக்கு கொஞ்சம் குறைவாக பணம் வைத்திருந்த கருணாஸ் அந்த நடிகரிடம் ஓடி போய் நின்றாராம். கருணாஸ் வச்சிருந்த பணத்தை வாங்கி, தொகுதியில் கடசியில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு பிரித்து கொடுத்து தேர்தல் வேலையே பார்க்க சொன்னாராம். அத்தோடு, ‘கவலைப்படாதீங்க…மிச்ச காசு எவ்வளவு ஆனாலும்…நான் பார்த்துகிறேன்” என்று சொல்ல…நிம்மதி யாக தொகுதிக்கு போய் இருக்கிறார் கருணாஸ்.

ஆனால்,பணமும் வரலை. போனும் எடுக்கப்படவில்லை. கையில் இருந்த அத்தனை காசும் முழுக்க செலவாக…கலங்கி போய் கதறிட்டாராம் கருணாஸ். அப்புறம் தலைமையிடம் சொல்லி அழ, ஒரு வழியாய் எம்.எல்.ஏ ஆகி உள்ளார். அன்னியிலிருந்து அவருடன் நட்பே கிடையாதாம்.அவரின் தூண்டுதல் தான் நடிகர் சங்க பொதுக்குழு நடந்தபோது கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாம்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.