Header Ads

சந்தேகத்தால் இறந்த இரண்டு உயிர்கள்..!


கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சோரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (27). இவருக்கும் மைசூரு டவுன் ஊட்டஹள்ளி அருகே உள்ள பெலகவாடி கிராமத்தை சேர்ந்த அனிதா (23) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதலுக்கு அனிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அனிதா தனது காதலில் உறுதியாக இருந்தார். மேலும் பெற்றோரிடம் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டிற்கு சென்று தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி செல்போனில் பேசிய காதலன் ரவி அதே பகுதியில் உள்ள வாலிபர் ஒருவரை காதலித்து வருவதாக என்னிடம் சிலர் கூறி வருகிறார்கள் என கேட்டு அனிதாவிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

காதலனே தன்னை சந்தேகப்பட்டு விட்டதாக மனமுடைந்த அனிதா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிக்கு தனது காதலியை சந்தேக்பட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வாட்டியது. இதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி தனது பெரிம்மாவின் வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் துக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.