Header Ads

மாதவனை மன்னிக்கவே மாட்டேன்..? பிரபல இயக்குனரின் கோபம்



கௌதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அலைபாயுதே படத்திற்கு பிறகு கௌதம் மேனன் பட கதையை தான் கேட்டிருக்கிறார் மாதவன்.

அப்போது அவர் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். அதனால் நீங்கள் முதலில் அவரிடம் கதை கூறுங்கள் என்று கௌதமிடம் கூறியுள்ளார்.

இதனால் மணிரத்னத்திடம், கௌதம் மேனன் வேறு வழியின்றி கதை கூறியதாகவும், தன்னை ஒரு சாதாரண கதையை மணிரத்தினத்திடம் கூறச்செய்த மாதவனை மன்னிக்கவே மாட்டேன் என்றும் கவுதம்மேனன் கூறினார். ஏனென்றால் மணிரத்னம், கௌதம் மேனனுக்கு மிகவும் பிடித்த இயக்குனராம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.