Header Ads

ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்ணை கற்பழித்த சங்கு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்

ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கேரள மாநிலம், கோவளம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தார். இந்நிலையில் கோவளம் கடற்கரையில் சங்கு வியாபாரம் செய்து கொண்டிருப்பவர் தேஜாபவார். இவரது கடையில் ஜப்பான் பெண் ஒருவர் சங்கு வாங்கியுள்ளார்.
பின்னர், அவரிடம் தங்குவதற்கு ஓட்டல் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு தேஜாபவார் தன்னிடம் உள்ள அறைக்கு அழைத்து சென்று இங்கே தங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
பிறகு அந்த பெண்ணிற்கு சாப்பிட உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை வெளியே அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தான் பாதிக்கப்பட்டது பற்றி போலீசிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வழக்குப்பதிவு செய்து சங்கு வியாபாரி தேஜாபாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.