Header Ads

அமெரிக்கா எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என ரஷ்யா எச்சரிக்கை..!



சிரியாவில் தீவிரவாதிகளை  ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும், ரஷ்யாவும் சிரியாவில் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசு நாடுகளும் முனைப்பு காட்டி வந்தாலும் , இரு நாடுகளுக்குள் பனிப்போர் நிகழ்ந்த வண்ணமே தொடர்கிறது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமை சில தினங்களுக்கு முன்னர் உலக நாடுகளுக்கு ஒரு  அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய நாட்டு ராணுவ பீரங்கிகளுக்கு சர்வதேச நாடுகள் எவ்வித உதவிகளையும் செய்யக்கூடாது’ எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ரஷ்யாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்ய ராணுவ மேஜரானஇகோர் கொனஷென்கோ நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளை நீங்கள்(அமெரிக்கா) ஒழிக்க முடியவில்லை என்றாலும் அல்லது ஒழிக்க விரும்பவில்லை என்றாலும் ஏன் எங்களுடைய வழியில் குறுக்கிடுகிறீர்கள்?

இனிவரும் காலங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளில் அமெரிக்கா எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.