Header Ads

பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை அடித்து சித்ரவதை செய்த போலி சாமியார் இவன்தான் இவனை தெரியுமா

பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை அடித்து சித்ரவதை செய்த போலி சாமியார் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பேய் ஓட்டுவதாக கூறி... செங்குன்றம் அருகே உள்ள புழல் அண்ணா நினைவு நகரை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(வயது 35). இவர்களுக்கு முரளி, கார்த்திக் என 2 மகன்கள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(38). நிலபுரோக்கர். இவர் கடந்த சில மாதங்களாக தான் சாமியார் என்றும் தன் மீது அம்மன் அருள் வருவதாகவும் அப்பகுதி மக்களிடம் கூறி வந்தார். கடந்த சில மாதங்களாக ராஜேஸ்வரி உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் நேற்று முன்தினம் சந்திரனை பார்ப்பதற்காக சென்றார். அப்போது சந்திரன் ராஜேஸ்வரியிடம் ‘‘உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. 

அதை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்’’ என கூறினார். மேலும்
அதற்கு பூஜைகள் செய்வதற்காக ராஜேஸ்வரியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பிரம்பால் அடித்தார் இந்தநிலையில் சந்திரன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி ராஜேஸ்வரியை ரெட்டேரியில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார். சந்திரனின் உதவியாளரான நவீன்(28) என்பவரும் உடன் சென்றார். பின்பு சந்திரன், ராஜேஸ்வரியை ஈரத்துணியுடன் ஏரி ஓரமாக உட்கார வைத்து பிரம்பால் அவரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. 

வலி தாங்கமுடியாமல் ராஜேஸ்வரி கூச்சல் பேட்டார். திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஏரிக்கு விரைந்து சென்றனர். வலைவீச்சு பொதுமக்கள் வருவதை பார்த்ததும் போலி சாமியார் சந்திரன், அவரது உதவியாளர் நவீன் இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள். பொதுமக்கள் இதுபற்றி புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜேஸ்வரியிடம் விசாரித்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் சந்திரன், அவரது உதவியாளர் நவீன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.