Header Ads

நியூயார்க்கில் 1.6 மில்லியன் டாலர் தங்க இழைகளை திருடிய நபர்..?




நியூயார்க்கில் ஒரு லாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க இழைகள் நிரம்பிய 36 கிலோ எடையுள்ள ஒரு வாளியை எடுத்துச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் எடுத்த சென்ற தங்க இழைகளின் மதிப்பு 1.6 மில்லியன் டாலர் (1.2 மில்லியன் பவுண்டு).தங்க இழைகள் வைக்கப்பட்டிருந்த இந்த கவச வண்டி, சிறிது நேரம் யாரும் இல்லாத நிலையில் சாலையில் நின்ற போது, 20 விநாடிகளில் இந்த திருட்டு நடந்துள்ளதை ஒரு கண்காணிப்பு காணொளி பதிவு காண்பித்துள்ளது.

தங்க இழைகள் கொண்ட பெட்டியை எடுத்துச் சென்றவர், அது மிகவும் எடை மிகுந்ததாக இருந்ததால் அதனை எடுத்துச் செல்ல சிரமப்பட்டதையும், பொதுவாக 10 நிமிடங்கள் ஆகும் தூரத்துக்கு அவர் 1 மணி நேரம் எடுத்துக் கொண்டதும் அந்த காணொளி பதிவில் தெரிய வந்துள்ளது. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாந்தோ அல்லது மியாமி பகுதியில், திருடிச் சென்றவர் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால், இவர் இன்னமும் பிடிபடவில்லை.

நியூயார்க் போலீஸ் துறையின் (என்ஒய்பிடி) புலனாய்வாளரான மார்ட்டின் பாஸ்டர் இதுகுறித்து கூறுகையில், ''தங்க இழைகள் அடங்கிய அந்த வாளியை எடுத்துச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை உணர்ந்த அவர், உடனடியாக அதனை எடுத்துச் சென்றுவிட்டார்'' என்று தெரிவித்தார்.

ஆனால், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பதை எடுத்து சென்றவர் அறிந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். குறிக்கப்படாமல், முத்திரையிடப்பட்ட ஒரு கருப்பு உலோக வாளியில் பல மில்லியன் மதிப்பிலான தங்கம் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டனர். பாதுகாவலர்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்திய திருடன்க டந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, மான்ஹாட்டனின் பரபரப்பான பகுதியில் இந்த நபர் சுற்றி திரிந்து கொண்டிருந்த வேளையில், ஒரு பொருளை விநியோகிக்க வேண்டியிருந்ததால் அங்கு லாரியை நிறுத்தி விட்டு வாகனத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதே நேரத்தில், அந்த வாகனத்தில் இருந்த இரண்டாவது பாதுகாவலர் வாகனத்தின் முன்னிருக்கையில் இருந்த தனது கைப்பேசியை எடுக்க சென்ற போது, அந்த வாய்ப்பை திருடன் நன்றாக பயன்படுத்தியுள்ளார். தங்க இழைகள் இருந்த வாளியை எடுத்து மேற்கு பகுதியில் உள்ள 48-வது தெரு வழியாக அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

மான்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பரபரப்பான சாலைகளில் 5 கேலன் எடையுள்ள உலோக பாத்திரத்தை அவர் எடுத்துச் சென்றதும், அதிக எடையுள்ள தங்கத்தை சுமக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு மூச்சு விட்டபடி நடந்து சென்றதையும் காணொளி பதிவு காண்பித்துள்ளது. பின்னர், அவர் பிரதான பகுதி சாலையில் இருந்து மறைந்துவிட்டார்.

ஹிஸ்பானிக் இனத்தை சேர்ந்தவர் என்று தங்களால் சந்தேகிக்கப்படும் இந்த நபருக்கு வயது 50 முதல் 60-க்குள் இருக்கும் என்றும், அவரது உயரம் 5 அடி 6 அங்குலமாகவும், அவரது எடை 68 முதல் 70 கிலோவாக இருக்கலாம் என்று தங்க இழைகளை எடுத்து சென்ற நபர் குறித்து போலீசார் விவரித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.