Header Ads

வெள்ளைக்காரர்களே புகழும் இந்திய வைர வியாபாரி இவர் தான்: 236 பேருக்கு திருமணம்



பொதுவாக இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் பலர் தமது பணத்தையும் பலத்தையும் காட்ட தமது வீட்டு விசேஷங்களை பெரும் விழாவாக கொண்டாடி அதற்கு கோடி கோடியாக செலவு செய்வது வழக்கம். சிலர் இதனால் வருமான வரித்துறையிடம் மாட்டிக்கொள்வார்கள். இதற்கு கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஒரு கல்யாண வீடு சாட்சி. ஆனால் இந்தியாவில் வைர வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கும் மகேஷ் சவானி என்னும் கோடீஸ்வரர் இதற்கு எல்லாம் எதிரானவர்.

அவர் 236 அப்பாவை இழந்த பெண்களுக்கு தன் செலவில் திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமல்லாது. ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் பெறுமதியாக பொருட்களை சீதனமாகவும் கொடுத்துள்ளார். மிகவும் எழிமையாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில் தனது மகனுக்கும் மிக மிக எழுமையாக கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

இதனை பல வெளிநாட்டு மீடியாக்கள் தமது தலைப்புச் செய்தியாக போட்டுள்ளார்கள். இதனை வாசித்த பல வெள்ளைக்காரர்கள் மற்றும் வேற்றின மக்கள் இவரை மனமார பாராட்டியுள்ளார்கள். ஒரு வெள்ளைக்கார மூதாட்டி இவரை நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று தாம் இறைவனிடம் கேட்பதாக தெரிவித்துள்ளார். உலகில் உண்ணதமான விடையம், ஏழை எழிய மக்களுக்கு உதவுவதே. இதனை தான் இந்தக் கோடீஸ்வரர் செய்துவருகிறார்கள்.




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.