Header Ads

திருமண நிகழ்ச்சியில் 2 மாத கர்ப்பிணி பெண்னை சுட்டுக்கொலை! மாப்பிள்ளை தம்பியின் வெறிச்செயல்!


பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. பதின்டா என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் குல்விந்தர் கவுர். 22 வயது. 2 மாத கர்ப்பிணி. உடலை வருத்திக் கொள்ளாமல் டேன்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் சகோதரன் தன்னுடன் டேன்ஸ் ஆடும்படி அவரை கேட்டுள்ளான். அவர் மறுத்துள்ளார். குடிபோதையில் இருந்த அந்த மிருகம், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டுள்ளது.

இதில் குண்டு உடலில் பாய்ந்து அந்த நடன அழகி அங்கேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நாடுமுழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஊடகங்கள் அந்த நிகழ்ச்சியின் வீடியோவை ஒளிபரப்பி வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது  கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைகாரன் உள்ளிட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.