Header Ads

பயங்கரமாக குறைந்து வரும் சிங்கள ராணுவம்: 4658 பேர் விலகுவதாக அறிவிப்பு



யுத்தம் முடிவடைந்த நிலையில், சிங்கள இளைஞர்கள் பல ஆயிரக்கணக்கில் ராணுவத்தில் இருந்து விலகி வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக இம்மாதத்திற்குள் விலகிச் செல்வதற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இம்மாதம் (டிசம்பர்) 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை (டிசம்பர்.26 வரை) 7 இராணுவ அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் 2 கடற்படை அதிகாரிகள், 424 கடற்படை வீரர்கள், 16 விமானப்படை அதிகாரிகள் 195 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவத்துள்ளார்.

இப்பொதுமன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பதோடு முதலாவது பொதுமன்னிப்புக் காலம் ஜூன் 13 இலிருந்து ஜூலை 12 வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சேவையிலிருந்து விலக விரும்பும் படை வீரர்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சேவை மையங்களுக்கு அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒன்றின் தோற்றம் வெளிப்பட்டுள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நாசா அண்மைக்காலமாக செவ்வாய் கிரகத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிடைக்கப்பெற்ற இரண்டாவது கரண்டி இதுவாகும்.

இச்சம்பவம் தொடர்பாக நாசா குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுவது, செவ்வாயில் அறிவியல் வளர்ச்சி நிலையில் உள்ள மனித நடமாட்டங்கள் உள்ளன. அதற்கு ஆதாரமானதுதான் கிடைக்கப்பெற்ற இரண்டு கரண்டிகள். அறிவியல் வளர்ச்சிமிக்க மனிதர்களே கரண்டிகளை பயண்படுத்துவர் அந்தவகையில் குறித்தச் சைகைகள் மனித நடமாட்டம் இருப்பதை ஊகிப்பதற்கு சான்றாக விளங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்றளவும் ஆய்வாரள்கள் செவ்வாய்கிரகத்தில் மனிதன் வாழலாம். இதற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனும் வாதத்தை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியான ஆய்வுகளை நாசா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.