Header Ads

எஸ்டோனியாவின் அதி நவீன 5ம் தலைமுறை தாங்கிகள் ரிமோட் கன்றோலில் இயங்க கூடியது என்கிறார்கள்



இராணுவம் பாவிக்கும் டாங் என்றாலே அது 20 அடி நீளமாகவும், 6 அடி உயரமாகவும் இருக்க வேண்டும் என்ற காலம் போய். மிகவும் சிறிய ரக டாங் (தாங்கிகள்) தற்போது வெளிவர உள்ளது. ரஷ்யாவுக்கு அருகாமையில் உள்ள எஸ்டோனியா என்னும் நாட்டில் உள்ள ராணுவ தளபாட உற்பத்தி நிலையம் ஒன்று இந்த 5ம் தலைமுறை தாங்கிகளை உற்பத்தி செய்ய உள்ளது. சுமார் 8 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட இந்த தாங்கிகள் படு வேகமாகச் செல்ல வல்லவை. இதில் 3 தொடக்கம் 4 பேர் பயணம் செய்யலாம்.

குறித்த இடத்தில் திடீர் என இறங்கி தாக்க முடியும். அத்தோடு இந்த 4 பேர் கொண்ட அணியில் ஒருவர் ரிமோட் கன்றோலர் மூலம் ராங்கை இயக்கவும் முடியும். இதனால் அந்த டேங் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்த. அதனை பின் தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்துவது மிகவும் சுலபமான விடையம் ஆகிறது. குறித்த டேங்குகள் குண்டு துளைக்காத உலோகத்தால் ஆனவை என்றும்.

சிறிய ரக குண்டு வெடிப்பில் இருந்து தன்னை பாதுகாக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. எஸ்டோனியாவில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றே இதனை வடிவமைத்துள்ளமையும், இதேவேளை ரிமோட் கன்றோலரை பாவித்து 1 மைல் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுட முடியும் என்றும் கூறப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.