Header Ads

கேட்டாலே அதிரும் செய்தி பாத்ரூம் ஊடாக சுரங்கம் அமைத்து தப்பிய 6 கைதிகள்



இது கேட்டாலே அதிரும் செய்தி: சினிமா படப் பாணியில், கிருஸ்மஸ் தினத்தில் பொலிசாருக்கு ஆட்டையை போட்டு 6 கைதிகள் தப்பியது எப்படி ? அமெரிக்க பொலிஸ் திணைக்களமே ஆடிப்போன சிறை உடைப்பு உதுதான். அதிர்வின் விசேட புலனாய்வு நிருபர் இது தொடர்பாக அமெரிக்க செய்திகள் அனைத்தையும் ஆராய்ந்து தகவலை திரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் டெனசி என்னும் மாநிலத்தில் உள்ள பெரிய சிறை தான் "கொக்கி கவுண்டி ஜெயில்" ஆகும். இங்கே உள்ள ஒரு கழிவறையில் சில மாதங்களாகவே 6 பேர் கொண்ட கைதிகள் குழு ஒன்று படுவேகமாக ஒரு காரியத்தை  ஓசை படாமல் செய்து வந்துள்ளார்கள். அது என்னவென்றால், கழிவறையில் சிறு நீர் கழிக்கும் , பாத்திரத்திற்கு பின்னல் உள்ள வழியை  தோண்டுவது தான். குறித்த இடத்திற்கு பின்னால் சிறிய சுரங்கம் போன்ற இடம் ஒன்று உள்ளது.

அது நீண்டு சென்று அங்கிருந்து பிறிதொரு இடம் நோக்கிச் செல்கிறது. அந்த இடத்தில் அதிகளவு பாதுகாப்பு இல்லை. மேலும் அந்த இடத்திற்கு சிறைக் கைதிகள் செல்ல முடியாது என்பதனால் அவ்விடத்தை பெரிதாக பொலிசார் கண்காணிப்பது இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி. முதலில் முறையாக சிறு நீர் கழிக்கும் பாத்திரத்தை அப்படியே களற்றி , சில வாரங்களாக அதன் பின் உள்ள ஓட்டையை பெரிதாக்கி, மனிதன் ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதனை கொண்டுவந்துள்ளார்கள். பின்னர் மீண்டும் அதனை பொருத்திவிட்டுவார்கள். பின்னர் மறு நாள் அவ்வாறு செய்வார்கள்.

இப்படி பல நாட்களாக முயன்று. இறுதியாக கிருஸ்மஸ் தினத்தில் காவலாளிகள் சற்று ஜாலியாக அல்லது அசட்டை தனமாக இருப்பார்கள் என்பதனை நன்றாக அறிந்து குறித்த 6 பேரும் அதனூடாக தப்பிச் சென்றுவிட்டார்கள். இவர்களை கோட்டை விட்ட பொலிசார் என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள். பெரும் பொலிஸ் படை ஒன்று இவர்களை மீண்டும் கைதுசெய்ய அலைகிறது. ஆனால் இவர்கள் சிக்குவார்களா என்பது தான் சந்தேகம். இவ்வளவு பிளான் போட்டு தப்பியவர்கள். வெளியே சென்றதும் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் போடாமல் இருந்திருப்பார்களா என்ன ?


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.