Header Ads

நாங்கள் வீழ்கிறோம்: ரஷ்ய விமானி சொன்னது கறுப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது !



92 பயணிகளோடு கருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானத்தின் 2 கறுப்பு பெட்டிகளையும் ரஷ்யா ராணுவம் மீட்டுள்ள நிலையில். முதல் கட்டமாக கறுப்பு பெட்டியில் பதிவாகியுள்ள தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு விமானிகளும் நாங்கள் வீழ்கிறோம் என்று பரபரப்போடு கூறியுள்ளார்கள். விமானத்தின் பின்னால் அமர்ந்திருந்த பணிப்பெண் ஒருவரோடு அவர் பேசும்போது , குறித்த பணிப் பெண் என்ன நடக்கிறது என்று கேட்டுள்ளார்.

இதனூடாக ஒன்று தெளிவாக புரிகிறது. விமானத்தின் கட்டுப்பாட்டை முற்று முழுதாக விமானிகள் இழந்துள்ளார்கள். அவர்களால் விமானத்தை மேற்கொண்டு பறக்கவைக்க முடியவில்லை. மேலும் விமானம் செங்குத்தாக நீரில் வந்து வீழ்ந்துள்ளது. விமானத்தில் 2 எஞ்சின் பொதுவாக இருப்பது வழக்கம். இதில் ஒன்று வேலைசெய்யாமல் போனால் கூட மற்றைய எஞ்சின் உதவியோடு விபத்தில் சிக்காமல் தரையிறங்க முடியும்.

ஆனால் இரண்டு எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயல் இழக்க என்ன காரணம் என்பது தான் புரியவில்லை என்கிறார்கள் ராணுவத்தினர். ஆனால் முற்று முழுதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் புட்டின்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.